Categories
உலக செய்திகள்

தாயைப்போல பிள்ளை… வீடு வீடாகச் சென்று… ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் குட்டி இளவரசி!

ஊரடங்கால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டிற்கு நேராக சென்று உணவு பொட்டலங்களை பிரிட்டிஷ் குட்டி இளவரசி சார்லட் வழங்கியுள்ளார்

எத்தகைய இக்கட்டான சூழலாக இருந்தாலும் தந்தை தாய் போன்று களத்தில் இறங்கி பணியாற்றுபவராகவே இருக்கிறார்கள் கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் கேட் தம்பதியின் பிள்ளைகள். பெற்றோர் பிள்ளைகளின் உதவியுடன் பாஸ்தாவை வீட்டிலேயே தயார் செய்து குட்டி இளவரசரின் உதவியுடன் பொட்டலங்களாக  கட்டியிருக்கிறார்கள் இளவரசர் வில்லியம் குடும்பத்தார். பின்னர் ஊரடங்கால் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல் இருக்கும் முதியோர் உள்ளிட்டவர்களுக்கு அந்த உணவு பொட்டலங்களை வீடு வீடாக சென்று கொடுத்துள்ளது இளவரசர் வில்லியம் குடும்பம்.

குட்டி இளவரசி சார்லட் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் குட்டி இளவரசி வீடு வீடாக சென்று உணவு கொடுக்கும் படங்களை அரண்மனை வட்டாரம் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களை எடுத்தது சார்லெட்டின் தாய் இளவரசி கேட். இளவரசி அவர்கள் சிறுமியாக இருக்கும் பொழுது எப்படி இருந்தாரோ அதேபோன்று சார்லட் காட்சியளிக்கும் கையில் பொட்டலத்துடன் வீட்டின் கதவைத் தட்டும் புகைப்படம் ஒன்றையும் பார்க்க முடிகின்றது.

மகாராணியின் பேத்தி இப்போதே மக்கள் சேவையில் குதித்து விட்டார் போலும். ஒரு வீட்டின் கதவை தட்டிய பொழுது நன்றாக மழை பெய்து விட இளவரசர் குடும்பம் மழையில் நனைந்து கொண்டே நிற்கின்றது. கதவைத்திறந்த வீட்டு உரிமையாளர் இதனை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் சேவை செய்ய விரும்பி தங்கள் பங்குக்கு களத்தில் இறங்கி விட்டார்கள் போலும் என கூறியிருக்கிறார் வீடு உரிமையாளர்.

Categories

Tech |