Categories
உலக செய்திகள்

3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மரணம்! சீனாவில் தொடரும் சோகம்

சீனாவில் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்  மாரடைப்பு காரணமாக  உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின்  சியான்டாவோ உள்ள சான்ஃபூட்டன் நகர மருத்துவமனையில் தலைசிறந்த நான்கு மருத்துவர்களில் Liu wenxiong ஒருவர் ஆவர்.

கொரானா வைரஸ் பாதிப்பு  அதிகமான பகுதியான  ஹூபே மாகாணத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 13ம் தேதி மன அழுத்தத்தால் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடைய மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வேலை பார்த்து வந்ததுதான் காரணம் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 12 வரை 3181 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் நகராட்சி நிர்வாகம் மருத்துவரின் மரணம் வேலை தொடர்பானது அல்ல என்று மறுப்பு  தெரிவித்துள்ளது. இருப்பினும் மருத்துவர் கொரானா காரணமாக இறக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி 25 அன்று 180 பேர் உட்பட ஒரு நாளைக்கு 100 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு  தவறாமல் சிகிச்சை அளித்து வந்தார் என அவர் மனைவி கூறியுள்ளார்.

டாக்டரின்  மகன், கடந்த 2017-ஆம் ஆண்டு தனது தந்தைக்கு இது மாதிரி நெஞ்சுவலி ஏற்பட்டதாக குறிப்பிட்டார். மீண்டும் பிப்ரவரி 13-ஆம் தேதி காலை மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்  உடனடியாக மருத்துவர் அழைக்கப்பட்ட நிலையில் அவர் காலை 6 மணிக்கு இறந்துவிட்டார்.

வைரஸ் தீவீரமாக பரவும் இந்த  நேரத்தில் இவரின் இழப்பு சீனாவிற்கு  பெரிய இழப்பு என்று கூறலாம்.

Categories

Tech |