இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவிற்கு முதல்வர் எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர் தன்னுடைய பதினெட்டாவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் சமூகத்திற்காக பாடுபட தொடங்கினார். தன்னுடைய வாழ்நாளில் பல பகுதிகளை சிறையிலேயே கழித்தார். தற்போது வரை எந்த ஆடம்பரமும் இல்லாமல் அரசியல் ஒதுக்கி கொடுத்த குடியிருப்பில் எளிமையாக காலத்தை கழித்து வருகிறார் இந்த சமூக போராளி.
இந்நிலையில் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான திரு நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். நல்லகண்ணு நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு பல வருடங்கள் பல்லாண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.