ஈரல் வதக்கல் செய்ய தேவையான பொருட்கள்:
ஈரல் – கால் கிலோ
மிளகு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 100 கிராம்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – மூன்று கரண்டி
உப்பு, மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப
செய்முறை
இரும்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஈரல், மிளகு, சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள் என அனைத்தையும் சேர்த்து கிண்டி மூடி வைக்கவும்.
பிறகு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் ஈரல் நன்கு வதங்கி இருக்கும். அதை இறக்கி சாதத்துடன் பரிமாறினால் மிகுந்த சுவையாக இருக்கும்.