பழங்காலத்திலிருந்தே கீரை வகைகளில் அதிக அளவு மருத்துவத் தன்மை கொண்டது பொன்னாங்கண்ணி கீரை. பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னாகும் என்பது சித்தர்களின் வாக்கு. பொன்னாங்கண்ணியில் இருக்கும் மற்ற மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு.
- வைட்டமின் ஏ சத்து நிறைந்த பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வருவதனால் கண் எரிச்சல், கண் வலி, கண் மங்குதல் போன்ற கண் தொடர்பான நோய்கள் அனைத்தும் விலகி கண் பார்வை பலம் பெறும்.
- பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஒற்றைத்தலைவலி பிரச்சனை நீங்கும்.
- வயிற்றுப்போக்கு மற்றும் ஜுரம் போன்றவைகளுக்கு பொன்னாங்கண்ணிக்கீரை ஏற்ற மருந்தாக அமையும்.
- கல்லீரலை பலப்படுத்த பொன்னாங்கண்ணிக்கீரை பெரிதும் உதவி புரியும்.
- பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலைப் பாதுகாக்கும்.
- குடலில் ஏற்படும் புழுக்களை தடுக்கும் பணியையும் பொன்னாங்கண்ணிக்கீரை சிறந்த அளவில் செய்யும்.
- உப்பு மற்றும் மிளகை பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்து சாப்பிடுவதனால் உடல் எடை குறையும்.
- பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிடுவதால் இதயமும் மூளையும் புத்துணர்ச்சி பெரும்.