கரூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழும் புரட்சித் தலைவரை என்று கட்டவுட் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் திட்டங்களின் நாயகர், குடிமராமத்து நாயகர் என்று பல அடைமொழிகளுடன் போஸ்டர்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் உள்ள முத்துக்குமார் ஒருபடி மேலே சென்று எடப்பாடி பழனிச்சாமியை கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பியுடன் புரட்சி தலைவரை என்று கட் அடித்து பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் வைத்துள்ளார். இந்தப் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர் கரூர் அமராவதி ஆற்றங்கரையில் எடப்பாடி பழனிச்சாமியை டிஜிட்டல் முறையில் பாகுபலியாக மாற்றி பிரமாண்ட கட்அவுட் வைத்திருந்தார். கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகி வைத்துள்ள இந்த “வாழும் புரட்சி தலைவரே” கட் அவுட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.