அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்றும் அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 2,381 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அங்கன்வாடி கட்டிடங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5000 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி DEE படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதல்கட்டமாக 2500 பேரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.