பழங்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு வண்டியின் டயர் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு பெங்களூருவிலிருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வேன் சென்றுள்ளது. இந்த வேன் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் முன்புற டயர் வெடித்து விட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியதால் அதில் இருந்த பழ மூட்டைகள் சாலையில் சிதறி விட்டது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய சரக்கு வேன் மற்றும் பழ மூட்டைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.