மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியான நிலையில், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மத்தூர்-வாலிபட்டி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் ராஜ் குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்ற செல்வி, கல்யாணி என்ற இரண்டு பெண்கள் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் காயமடைந்த கல்யாணி மற்றும் செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.