சரக்கு ஆட்டோ சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் 10 – க்கும் மேற்பட்டோர் வாழைத்தாரை லாரியில் ஏற்றி வைத்துள்ளனர். அதன்பிறகு சரக்கு ஆட்டோவில் அனைவரும் ஏறி சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு பயணம் செய்துள்ளனர்.
அப்போது ராமானுஜபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கன்னிராஜ், வடிவேல், லிங்கதுரை, கணேசன், முத்துகிருஷ்ணன், உள்ளிட்ட 10 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.