Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி நடந்துச்சு…? பற்றி எரிந்த லோடு வேன்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே லோடு வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிப்ஸ் கம்பெனி நடத்தி வரும் ரவிக்குமார் அதனை கடைகளுக்கு எடுத்து செல்வதற்காக லோடு வேன் ஒன்றை வைத்திருக்கிறார். இந்த லோடு வேன் டிரைவராக சங்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இதனை அடுத்து சங்கர் சிப்ஸ்களை கடைகளில் இறக்கிவிட்டு லோடு வேனில் திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்த போது லோடு வேனின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர் உடனடியாக வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கியுள்ளார்.

அதன்பிறகு சிறிது நேரத்திலேயே லோடு வேன் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வாகனம் முற்றிலும் சேதமடைந்து விட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |