சீனாவில் உள்ளூர் அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்று உறுதியான மூன்று வீட்டு பூனைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி சீனாவில் Miss Liu எனும் பூனைகளின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து Miss Liu தனிமைப்படுத்தப்பட்டதோடு அவருடன் இருந்த 3 பூனைகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் மூன்று பூனைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூனைகளின் உயிரை காப்பாற்றுவதற்காக Miss Liu ஆன்லைன் முறையீட்டை வெளியிட்டுள்ளார். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹார்பினில் உள்ள அதிகாரிகள் அந்த மூன்று பூனைகளையும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகளின் இந்த கொடூர செயல் செய்தியாக வெளியானதையடுத்து பலரும் கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளனர். மேலும் சில நேரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த சீனா முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவலாம் ஆனால் மனிதர்களுக்கு விலங்குகளிடமிருந்து பரவ வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ளன.