Categories
மாநில செய்திகள்

#Local Body Elections(2022): சுயேச்சைகள் கைவசம் வந்த சாயல்குடி…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ள சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளனர் அப்பகுதி வாக்காளர்கள். பிரதான கட்சியான திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |