உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி நெருங்குவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் திட்டமிட்டபடி வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 16-ஆம் தேதி கடைசி நாளாகும். இதனால் தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயட்சைகள் மனு தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்கான இடங்கள் குறித்து பேசியதாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு அறிவித்தபடி உள்ளாட்சி தேர்தலில் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 16ஆம் தேதி கடைசி நாள் என்பதால் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.