Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் !!!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள  கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது  கொடியம்பாளையம் என்ற தீவு கிராமம். இந்த கிராமம் மூன்று பக்கம் கடல்  மற்றும் ஒருபக்கம் உப்பனாறாறும் சூழ்ந்துள்ளது.  தீவு போல காட்சியளிக்கும் இக்கிராமத்தில் சுமார் 25 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி முடிவடைந்துள்ள நிலையில் 17ஆம் தேதி மனுக்கள் மீதான மறுபரிசீலனை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெறுகிறது.

இந்நிலையில், கொடியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காமராஜ் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு ஒரு  மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் மக்கள் தங்களது உறுப்பினர்களை  ஒரு மனதாக தேர்ந்தெடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |