திருச்செந்தூர் அருகே காயாமொழியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதனால் வாக்குச்சாவடியை மறு சீரமைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காயாமொழியில் ஏழாவது வார்டு வாக்குச்சாவடி ஐந்தாவது வார்டிற்கும் ஐந்தாவது வார்டு வாக்குச்சாவடி ஏழாவது வார்டிற்கும் மற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் கூறியுள்ளனர்.