Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: 98 வயது மூதாட்டி வாக்களிப்பு..!!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி மயிலாடுதுறையில் 98 வயது மூதாட்டி தனது வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தார்.

மயிலாடுதுறையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், 98 வயது நிறைந்த மூதாட்டி ஓருவர் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்கு அளித்துத் தனது ஜனநாயாக கடமையை ஆற்றியது அங்கு இருப்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து அதிமுக ஒன்றியச் செயலாளரான சந்தோஷ்குமார், ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குப் பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

Categories

Tech |