Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படடமால் இருக்க திமுக தான் காரணம்…அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!!

உள்ளாட்சி தேர்தலை விரைவில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,கடம்பூர் ராஜு,பெஞ்சமின் ஆகியோர் தியாகி சங்கரலிங்கனார், ஆர்யா என்கின்ற பாஷம் செண்பகராமன் ஆகியோரது புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

Image result for minister jayakumar

உள்ளாட்சி தேர்தலை நடத்த வில்லை என்றால் தமிழக அரசுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஆகையால் தேர்தல் நடத்தக்கூடாது என்ற நிலைப்பாடு அரசிடம் இல்லை என்றும், மாநில தேர்தல் ஆணையம் தான் தேர்தல் நடத்த கால அவகாசம்  கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் திமுக தான் என்றும், அவர்கள் கோர்ட்டிற்கு சென்று வழக்கு தொடரவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று இருக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |