கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் தீபாவளி , ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் மிகவும் பாதுகாப்பாக அரசு அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தபடியே கொண்டாடி வந்தனர். இந்த வரிசையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையையும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.