Categories
சற்றுமுன் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் , பாப்பிரெட்டிபட்டியில் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.

தீர்த்தமலை என்பது தமிழ் நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்.இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்பார்கள்.

மாணவர்கள் மகிழ்ச்சிக்கான பட முடிவுகள்

மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 14ஆம் தேதி ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 28ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுள்ளது. விடுமுறை உத்தரவால் பொதுமக்கள் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |