Categories
Uncategorized தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலில் சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு!

திருப்பதி கோயிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கானது ஜூன் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்து கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக உள்ளூர் மக்கள், தேவஸ்தான ஊழியர்களுக்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. 6 அடி இடைவெளியின் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. வரும் 8ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |