செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலையில் காரணமின்றி வெளியில் வந்தவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். மேலும் மாமல்லபுரத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.