Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருமானமே இல்லை… வரியை ரத்து செய்யனும்… 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக வேலையில்லாததால் சுமார் 35 ஆயிரம்  லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் லாரிகள் மூலம் ஜவ்வரிசி, சர்க்கரை, கல், மாவு, இரும்பு பொருட்கள், வெள்ளம்  மற்றும் ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தற்போது ஊரடங்கால் சுமார் 35 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டு குறைவான லாரிகள் மற்றும்  ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இயக்கப்படாத லாரிகள் செவ்வாய்பேட்டையிலுள்ள லாரி மார்க்கெட் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் என ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த வருடங்கள் லாரி உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் லாரி டிரைவர், கிளீனர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் லாரிகளை பழுதுபார்க்கும் பட்டறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் லாரி தொழிலை பாதுகாக்க 6 மாத காலத்திற்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டுமென மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |