Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 36 இடம்…. இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரங்கின் போது வெளியில் தேவையில்லாமல் சுற்றியவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகர் பகுதியில் அவரவர் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளில் காய்கறிகள் வாங்கிக் கொள்ள வேண்டாம் என காவல் துறையினர் கட்டுப்பாடுகள் வித்துள்ளனர்.

இதனையடுத்து சேலம் மாநகரில் மொத்தம் 36 இடங்களிலும் இரும்பு கம்பி மூலம் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கட்டுப்பாடுகளை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வாகனங்களில் வந்தவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |