Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? ஊரடங்கை நீட்டித்த அரசாங்கம்…. முக்கிய தகவலை வெளியிட்ட பொதுநிர்வாக மந்திரி….!!

வங்காளதேசத்தில் ஒரேநாளில் 5,000 த்திற்கும் மேலான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை முன்னிட்டு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்நிலையில் வங்காளதேசத்தில் ஒரேநாளில் 7,614 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

இதனால் தற்போது வங்காளதேசத்தில் முந்தைய ஊரடங்கு போல் இல்லாமல் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று வங்காளதேசத்தின் பொதுநிர்வாக மந்திரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |