வங்காளதேசத்தில் மிக வேகமாக கொரோனா அதிகரிப்பதைத் தொடர்ந்து கடந்த முறையை காட்டிலும் மிகவும் கடுமையான கட்டுப்பாடுடன் கூடிய மொத்தமாக 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை சரிசெய்ய அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இந்நிலையில் வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனை முன்னிட்டு வங்காள நாட்டு அரசாங்கம் இன்று முதலில் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மிகவும் கடுமையான கட்டுப்பாடுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தற்போது போடப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு கடந்த முறையை போன்று இல்லாமல் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஊரடங்கை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை இராணுவத்தினர்கள் களத்தில் இறக்கப்பட்டு கண்காணிப்பாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.