திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் வசூலித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் தவிர மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பகுதியில் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறையினர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கடை வீதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைக்கு சீல் வைத்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.