சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி பகுதியிலிருக்கும் ரேஷன் கடையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முழுமையாக ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.