Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென மேற்கொள்ளப்பட்ட ஆய்வு… ஊரடங்கு குறித்து அறிவுரை… தீவிர வாகன சோதனை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று திருச்சி சரக டி.ஜ.ஜி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியில் செல்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து தேவையில்லாமல் செல்பவர்களுக்கு  அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூரில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் இலுப்பூர் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதனையடுத்து முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கிறதா என்று திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா ஆய்வு மேற்கொண்டார். அப்போது  அந்த வழியாக வந்த அவர் திடீரென ஜீப்பை நிறுத்தி அங்கிருந்த காவல் துறையிடம் ஊரடங்கு காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றி  எடுத்துக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Categories

Tech |