புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு என்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டுமென்றும் 10 மணிக்குப் பிறகு கடைகள் திறந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் அம்மா உணவகங்கள் திறந்திருந்தது. இதனையடுத்து பேருந்துகளும் இயக்கப்படாததால் ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனையடுத்து தேவையின்றி வெளியில் சுற்றிதிரிந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.