Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பொது இடங்களுக்கு தடை நீடிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…. ஆட்சியரின் வேண்டுகோள்….!!

கொரோனோ தொற்றின் காரணமாக பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் நோய் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. இந்நிலையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை வருகின்ற செப்டம்பர் 26 – ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும், நோய்த்தொற்றின் வீரியத்தை குறைப்பதற்கு அரசுடன் சேர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரான முருகேஷ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |