Categories
அரசியல் மாநில செய்திகள்

ரோட்டை லாக் செஞ்சாச்சு… உள்ளே யாரையும் விடாதீங்க.. அதிமுக MLAக்கள் அதிரடி கைது… நச்சுன்னு தூக்கிய போலீஸ் …!!

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவரது வீட்டின் முன்பாக வேலுமணி ஆதரவாளர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வந்த நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு முன்பு உள்ள ஆதரவாளர்கள் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டின் முன்பு அதிக அளவில் தொண்டர்கள் கூடுவதை தடுக்கும் விதமாக, எஸ் பி வேலுமணி வீட்டிற்கு வரும் இணைப்பு சாலைகள் முழுவதுமே காவல்துறையினர் தடுப்புகளை வைத்து மறைத்தனர். தொண்டர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களை கைது செய்யக்கூடிய நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு தரப்பினரையும் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து வருகின்றனர்.

Categories

Tech |