Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீடிக்குமா….? அதை அப்போது பார்க்கலாம்….. அமைச்சர் பதில்….!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கு இந்தப்பதிவில் கூறப்பட்டிருக்கும் பதில் என்னவென்றால், 

எது எப்படியோ நம்முடைய மக்கள் சமூக விலகலை முறையாக கடை பிடிக்க மாட்டார்கள். அதில் அஜாக்கிரதையாக இருப்பார்கள். எனவே இப்போதைய சூழ்நிலைக்கு ஊரடங்கு தான் சரி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்களின் அடிப்படையாக கொண்டும் ஊரடங்கானது இந்தியாவில் நீட்டிக்கப்படலாம்.

மேலும் மே 3ஆம் தேதிக்கு பிறகு விமான டிக்கெட்களை புக்கிங் செய்யலாமா ? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விமானத்துறை  அமைச்சர் அதை அப்போது பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார். இதற்கு முன்  ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய இருந்தபோது விமானத்துறை அமைச்சரிடம் டிக்கெட்கள் குறித்து கேட்கையில் அவர் இதே பதிலை கூறியது குறிப்பிடத்தக்கது. எதை செய்தாலும் மக்கள் நலனுக்காகவே அரசு செயல்படும் என்பதை மனதில் கொண்டு நம்பிக்கையோடு இருப்போம்.

Categories

Tech |