புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் பொது மக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் காய்கறிகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள், உழவர் சந்தைகள் பகல் 12 மணி வரை மட்டும் இயங்கியுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை.
இதனையடுத்து அனைத்து அரசு பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலுள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் கடைகள் ஏதும் திறந்து விற்பனை செய்கிறார்களா என்று சோதனை செய்துள்ளனர்.