Categories
உலக செய்திகள்

ஊரடங்கு காலகட்டம் எப்படி இருந்தது..? அனுபவங்களை பகிர்ந்த மனிதர்..!!

ஊரடங்கு காலகட்டத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்றும் அது குறித்து ஒரு நபரின் அனுபவங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை நம்மில் ஒருவர் கூட நினைத்து பார்த்திராத அளவிற்கு நம் வாழ்க்கை முறையை மாற்றியது கொரோனா என்னும் கொடிய வைரஸ். அதனால் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு தொடங்கி முகக்கவசம் வரை கூறலாம். எனினும் அந்த ஊரடங்கு காலகட்டத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்று பார்ப்போம்.

ஊரடங்கின் போது வெளிநாடுகளில் பலர் பணிக்கு செல்ல முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக பல செய்திகள் வெளிவந்தது. ஆனால் நம் நாட்டில் விடுமுறை கிடைக்காதா? குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட மாட்டோமா? என்று நம்மில் பலர் ஏங்கியதுண்டு. எனவே ஊரடங்கு காலகட்டத்தில் ஓரளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தோம் என்று கூறலாம்.

மேலும் நம் குழந்தைகள் விடுமுறை என்றாலே ஜாலியாக கொண்டாடலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் பள்ளி செல்ல முடியாததால் பல குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் பணி ஓய்வு பெற்ற Perera என்பவர், ஊரடங்கு காலகட்டத்தில் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2020ஆம் வருடத்தை மறக்க நினைக்கும் அளவிற்கு தான் நாம் அதனை எதிர்கொண்டோம். அந்த காலகட்டத்தில் உலகமே நின்றது போல் தான் தோன்றியது. மேலும் தனிமைப்படுத்துதலை எதிர்கொள்வது எளிதானது இல்லை. வாழ்வில் எதிர்பாராத பல்வேறு விஷயங்களை இந்த காலகட்டம் தான் தந்திருக்கிறது.

அதே சமயத்தில் வாழ்க்கையின் எளிமையான மற்றும் சாதாரண விஷயங்களை மகிழ்வுடன் பகிர நமக்கு நிறைய நேரம் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு கூறிய அவர் இறுதியாக கூறியது மறுக்க முடியாத உண்மை. கொரோனா என்னும் கொடிய நோய், மக்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்தியிருக்கிறது. அதாவது நமது தோலின் நிறம் பார்த்தோ, எங்கு பிறந்தவர்கள் என்று பார்த்தோ கொரோனா தொற்றவில்லை என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |