ஜெர்மன் நாட்டில் பல விதிமுறைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஓலாப் சோல்ஸ் தெரிவித்திருக்கிறார்.
ஜெர்மன் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வரும் பிப்ரவரி மாதத்தில் ஒமிக்ரான் பரவல் தீவிரமடையும் என்று சிறப்பு சுகாதார குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பரவல் குறையும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.