Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு….. வாரத்தில் 2 நாள் முழுஊரடங்கு….. முதல்வர் அறிவிப்பு….!!

மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இதற்கான கால வரையறை வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், அதன் பிறகு இந்தியா முழுவதும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அந்தந்த மாநிலங்களில் இருக்கக்கூடிய கொரோனா பாதிப்பின் அளவை கணக்கில் கொண்டு அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கை தங்களுக்கு ஏற்றாற்போல் நீடித்து வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவரது மாநிலத்தில் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் இந்த ஒரு மாத காலத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

Categories

Tech |