ஊரடங்கில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து விளக்கவே இந்த தொகுப்பு.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனால் அவரவர் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவானது. அன்றாடம் இயக்கப்பட்டு வந்த வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வரும் 17 ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் 45 நாட்களுக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை மீண்டும் எடுக்கும் பொழுது நன்கு கவனித்து எடுக்க வேண்டும் என்று கார் பழுது நீக்கும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். காரின் அடிப்பகுதியிலும் இன்ஜின் உள்ள பகுதியிலும் பாம்பு, எலி, குருவி போன்றவை தங்கி உள்ளனவா என்று பார்த்த பின்னர் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
காரின் ஜன்னல்களை திறந்து விட்டு உடனடியாக இன்ஜினை ஸ்டார்ட் செய்யக்கூடாது என்றும் அப்படிச் செய்தால் இன்ஜின் சீஸ் ஆகும் எனவும் கூறுகிறார். பல நாட்களாக இயக்கப்படாத கார்களை அதன் உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் கார் பழுது நீக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.