சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடங்கி இருப்பதால் கடும் கட்டுப்பாடுகளை விதித்த அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை குடியிருப்பிற்குள் சிறை வைத்திருக்கிறது.
சீன நாட்டின் வூஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் முழுமையாக குணம் பெறும் வரை அந்நகரில் இருந்து வெளியேற முடியாது.
பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு மையங்களும், உணவகங்களும் அடைக்கப்பட்டிருக்கிறது. அரசு போக்குவரத்து சேவைகள் குறைக்கப்படும் என்றும் வழிபாட்டு தலங்கள் அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வூஹான் நகரில் நான்கு நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்குள் நகரம் முழுக்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதன் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டதும் வூஹானில் தான், கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் வூஹானில் தான். அதன் பின்பு, தான் உலக நாடுகள் ஊரடங்கை கடைபிடித்தன என்பது நினைவுகூரத்தக்கது.