Categories
உலக செய்திகள்

மறுபடியும் ஊரடங்கா….? பிரான்ஸ் பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

பிரான்ஸ் நாட்டின் பிரதமர் Jean Castex, நாட்டில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார்.

பிரான்சில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அங்கு தடுப்பூசியளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 44,000-த்திற்கும்  அதிகமான தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த திங்கட்கிழமை அன்று அரசு அடுத்த வருடம் ஜனவரி 6ஆம் தேதி வரை இரவு நேரத்தில் இயங்கும் கிளப்புகள் அடைக்கப்படும் என்று அறிவித்தது.

எனினும், கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி மக்கள் மகிழ்ச்சியாக எப்போதும் போல் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும், விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அந்நாட்டின் பிரதமர் Jean Castex தெரிவித்திருக்கிறார். மேலும், பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை தடைசெய்யும், அடுத்த ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் தற்போது வரை பரிசீலிக்கவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |