சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருபத்தி மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இரண்டு மாவட்டங்களில் கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில் பீஜிங் நகரத்தின் பகுதிகளில் அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். அங்குள்ள Fengtai என்ற மாவட்டத்தில் சுமார் 2.26 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள்.
இதனுடன் சேர்த்து 68 ஆயிரம் மக்கள் வசிக்கும் Anzhenli என்ற பகுதி போன்றவற்றில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் வெளியில் வர முடியாது. மேலும் அவர்கள் வெளியில் வருவதற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
எனினும் பீஜிங் நகரத்தில் இருக்கும் இரண்டு பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ரகசியமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.