Categories
உலக செய்திகள்

இலங்கை பிரதமரின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்… கொழும்பு நகரில் வெடித்த வன்முறை… ஊரடங்கு அமல்…!!!

கொழும்பு நகரில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே உத்தரவின் பேரில்  பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆனால் மக்கள் போராட்டங்களை நிறுத்தவில்லை. மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பிரதமரின் வீட்டிற்கு முன்பு அதிகமான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அங்கு கூட்டமாக திரண்டனர். அவர்கள், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என்று முழக்கமிட்டதால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பிரதமரின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

எனவே, காவல்துறையினர் அவர்களை தடுத்து கூட்டத்தை கலைத்து வெளியேற்றினார்கள்.  அதன்பிறகு, கொழும்பு நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, தன் ட்விட்டர் பக்கத்தில் மக்கள் பொறுமையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பொறுமையை இழந்தால் கலவரம் வெடிக்கும் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். நாம் சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வு வேண்டும். அதற்காக அரசு உறுதிபூண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |