வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் வைபவ். கோவா, ஈசன், மங்காத்தா, ஆம்பள உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர், மேயாத மான் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தற்போது வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகிவரும் ‘லாக்கப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கிரைம் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தை இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்த எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். இதில் வைபவுக்கு ஜோடியாக சின்னத்திரை நயன்தாரா என அறியப்படும் வாணி போஜன் நடிக்கிறார்.
மேலும், இயக்குநர் வெங்கட்பிரபு காவல் துறை கதாபாத்திரத்திலும் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஜருகண்டி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா ‘லாக்கப் ‘ படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு பிசாசு பட புகழ் அரோல் கொரோலி இசையமைக்கிறார். சாண்டி கிராங்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்திருக்கிறது.
Here it is …. proudly happily presenting #lockup @actor_vaibhav @vp_offl @vanibhojanoffl @shamna_kasim @SGCharles2 @editor_mad @ArrolCorelli @teamaimpr @kbsriram16 pic.twitter.com/TUPjRPJzBm
— Nitinsathyaa (@Nitinsathyaa) November 1, 2019