Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊராடங்கில் தளர்வு…. விடுதிகளை திறக்க தொடர் தடை…. மாவட்ட ஆட்சியர் விளக்கம்….!!

விடுதிகளை திறப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஐந்தாம் கட்டமாக தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்கள், ஹோட்டல்கள் , வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு விதித்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, ஓட்டல்களில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அமரவைத்து சாப்பாடுகள் பரிமாறப்பட வேண்டும். அதேபோல் ஹோட்டலுக்குள் நுழையும்போது முகக்கவசம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். சாப்பிடும் நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அடிக்கடி தங்களது கைகளை கிருமிநாசினிகளால் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இதனை கடை உரிமையாளர்கள் கட்டாயம் ஊழியர்களும் பொதுமக்களும் பின்பற்றுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு இருக்கையில் , ஹோட்டல் கோவில் வளாகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு தளர்வுகள் ஏற்படுத்தியது போல், விடுதிகளிலும் தளர்வுகள் ஏற்படுத்தப்படுமா ? என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்து வந்தது.

இதற்கு பதிலளித்த சேலம் மாவட்ட ஆட்சியர் விடுதிகள் திறக்கப்பட்டால் அங்கே தங்க வருபவர்கள் சாதாரண உப்பு முதல் துணி, பணம் உள்ளிட்ட பரிமாற்றங்கள் எளிமையாக நிகழும் என்பதாலும், இதன் மூலமாக கொரோனா பரவும் அபாயம் ஏற்படும் என்பதாலும் விடுதிகள் அரசின் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டு தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |