Categories
கட்டுரைகள் பல்சுவை

இளைய இந்தியா பலமா ? பாரமா ?

பல ஆண்டுகளாக  இந்தியாவின் பெரும் சுமையாக, பிணியாகக் கருதப்பட்டது. அதன் மக்கள் தொகை .மண்ணுக்கும் மரம் பாரமா என்ற எண்ணம் போய் மக்கள் தொகை நாட்டுக்கு பாரம் என்ற எண்ணம் உருவானது. பாரத்தைக் குறைக்கவே ‘நாம் இருவர் நமக்கு இருவர்” போன்ற திட்டங்கள் உருவாகி அது ,நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று உருமாறி பின்னர் மொத்த குடும்பத்திற்கு ஒருவர் போதுமே என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.அப்படி பாரமாக இருந்த மக்கள் தொகை என்னும் சுமை இப்பொது இளைய இந்தியா என்னும் சுகமாயிருக்கிறது. இந்திய நாடு இளமையான நாடு .அதன் மக்கள் தொகையில் பாதி 25 வயதுக்கு உட்பட்டோர் மூன்றில் இரண்டு பங்கு முப்பது வயதுக்குக் கீழே உள்ளவர்கள் என பெருமையுடனும் நம்பிக்கையுடனும் கூறும் நிலை எழுந்துள்ளது. உலகமே இந்தியாவையும் ,அதன் இளைஞர் சமுதாயத்தையும் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டு பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இதற்காக நாம் மகிழும் அதே வேளையில் நாம் கவனத்துடன் பார்க்கவேண்டிய ஒன்று உண்டு. அது மக்கள் தொகை என்னும் சுமை,எப்படி சுகமாக மாறியதோ அதே போல இளைய இந்தியா என்னும் பலம் ,பலவீனமாக மாற வாய்ப்புள்ளதா என்பதுதான் நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு.அதே போல் இந்தியாவிற்கு வலிமை சேர்க்கும் இளைஞர்கள், சரியாகப்  பேணி ,வளர்த்து பாதுகாக்கப்படாமல் போனால் இந்தியாவிற்கு வலியையும் உண்டாக்கலாம்.

 

இளைய சமுதாயத்திற்கு உடல்நலம், கல்வி ,வேலைவாய்ப்பு ,வாழ்க்கைத்தரம் போன்ற அடிப்படை உரிமைகளை ஏற்படுத்தி கொடுத்து முன்னேற வாய்ப்பு அளிக்கும் வரை அவர்கள் மனம் ஓன்று பட்டு உள்ளத் தெளிவுடன் நாட்டு முனேற்றத்திற்குப் பாடுபடுவார்கள்.இளைஞர்கள் உடல்நலம் பேண முடியாமல் ,கல்வி கற்க வசதியில்லாமல்  வேலைவாய்ப்பு இல்லாமல் போக நேரிடுமானால் அவர்களின் காட்டாற்று வெள்ளம் போன்ற சக்தி ,பயனுள்ள மின்சாரம் தயாரிக்கும் ஆக்க சக்தியாக உருவெடுக்காமல் பயிரைக் சேதப்படுத்தும் அழிவு சக்தியாகவே  மாறும்.

இளைய இந்தியா உட்சபட்ச என்னிக்கையை அடைய இன்னும் பத்துஆண்டுகளே உள்ள நிலையில் நாம் அனைவரும் இப்போதாவது ஒருங்கிணைந்து அவர்கள் தங்கள் சக்தியினைச் சிதறவிடாமல்  ,ஒருமுகப்படுத்தி ,வீடும் நாடும் பயனடையும் வகையில் கற்கும் ,உழைக்கும் ,சமவாய்ப்புத் திடங்களைத் தீட்ட வேண்டும். அவை முழுவீச்சுடன் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றப்பட வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே இளைய இந்தியா பலமான ஒப்பில்லாத சமுதாயமாக உருவெடுத்து உலகிற்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கும்.

வளத்தில் சிறந்தது மக்கள் வளம்!

அதுவே இந்தியாவின் மூலதனம்!

Categories

Tech |