பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக புதிய தசாப்தத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கோலோ நேற்று வெளியிடப்பட்டது. இது ஆர்சிபி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே புதிய லோகோ குறித்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி விளக்களித்துள்ளார்.
அதில், ” புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவுடன் களமிறங்குவதற்கு ஆவலாக இருக்கிறோம். இந்த லோகோ நமது வீரர்களின் சவால் நிறைந்த ஆட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே ஆர்சிபி அணி சார்பாக லோகோவுடன் கூடிய தீம் மியூசிக் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 2008ஆம் ஆண்டு முதல் 2019ஆண்டு வரையிலான ஆர்சிபி அணியின் சின்ன பயணத்தைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
LOGO ka kaam hai kehna. 😄 Thrilled to see our new @rcbtweets logo. It embodies the Bold pride and challenger spirit that our players bring to the field. Can’t wait for #IPL2020 #NewDecadeNewRCB 🤩 https://t.co/n8c24JqbAl
— Virat Kohli (@imVkohli) February 14, 2020