வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தைப்பெறுமென தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார்.17_ஆவது மக்களவை_க்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11_ஆம் தேதி தொடக்கி மே 19_ஆம் தேதி 7_ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று மே 23_ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென்று தெரிவித்தார்.