தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 37 தொகுதிகளில் வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் கோளாறு ஏற்பட்ட வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது .
இதையடுத்து 37 மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவும், 18 சட்ட பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு பதிவும் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்கு சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுரை தொகுதியில் மட்டும் சித்திரை திருவிழாவையொட்டி இரவு 8 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.