இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குடும்பத்தினருடன் நடிகர் அர்ஜுன் தாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநாடு’ என்ற வெற்றிப்படத்தை இயக்கி அனைவரின் கவனத்தைப் பெற்றவர் . இதையடுத்து இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி பிரபலமடைந்தார். அதைத்தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகனான விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார் . இந்த படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது .
With the #Kanagarajfamily@Dir_Lokesh #Master pic.twitter.com/zYmlr3ufAZ
— Arjun Das (@iam_arjundas) January 18, 2021
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துள்ளார் . தற்போது அர்ஜுன் தாஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.