லண்டனில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் நாட்டின் பாரம்பரிய ஆடைகள் இடம்பெற்றுள்ளன.
லண்டனில் பேஷன் வீக் சோ என்று அழைக்கப்படும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் லடாக்கின் பரம்பரியம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் இடம்பெற்றுள்ளது. லடாக்கை சேர்ந்த ஆடை உற்பத்தி தொழில் முனைவர்களான பத்மா யாங்சன் ஜிக்மத் திஸ்கத் ஆகியவர்கள்Namaz Couture ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். லடாக்கில் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமாக Namaz Couture செயல்பட்டு வருகிறது. இதில் பிரபல ஆடை களான பஷ்மினா ஆடை மற்றும் காஷ்மீரி ஆடைகளை ஆடு யாக் எருது மற்றும் ஒட்டகம் போன்ற மிருகங்களின் தோல்களை வைத்த தயாரிக்கின்றன.
இந்நிறுவனத்தில் மிகவும் தனித்துவம் வாய்ந்த கம்பளிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் ஆடைகள் அனைத்தும் பல்வேறு கைத்தறி கலைஞர்களை கொண்டு டிசைன் செய்யப்படுகிறது. இதன் இடையில் ஆடைகளுக்கு ரசாயன சாயங்களை தவிர்த்து இயற்கையான சாயங்களை பயன்படுத்துவதால் இந்த ஆடைகளை கூடுதல் சிறப்பு வாய்ந்தவையாக பார்க்கிறார்கள். ஆடைகளின் விற்பனை விலை சந்தைகளில் 12 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பத்மா யாங்சன் கூறுகையில் “ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் எங்களின் ஆடை உற்பத்தித் துறையில் இந்த நிகழ்வு புதிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. மென்மேலும் நிறுவனம் வளர்வதற்கான எங்களின் உழைப்பிற்கான உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது”. என்று கூறியுள்ளார்.